பாகிஸ்தான், ஆகஸ்ட் 20 - பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் வெள்ளிக்கிழமை முதல் பெய்த கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் குறைந்தது 341 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அவர்களில், வடமேற்கு கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் புய்னர் மாவட்டத்தில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக மாகாண பேரிடர் நிர்வகிப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்த வெள்ளத்தில் இடிந்து விழுந்த வீடுகள், சிதறிய பாறைகள், குப்பைகள் நிறைந்த தெருக்கள் ஆகியவற்றை ஆளில்லா விமானத்தின் காணொளிகள் காட்டுகின்றன.
கடுமையான மழை பல வட மாவட்டங்களில் அழிவை ஏற்படுத்தியுள்ளதோடு பெரும்பாலான உயிரிழப்புகள் திடீர் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ளன.
--பெர்னாமா


