ஷா ஆலம், ஆக. 20 - குற்றம் சாட்டப்பட்ட சிறார்கள் உள்பட சட்டத்தை மீறுபவர்கள் அனைவருக்கும் எதிராக ஒருபோதும் சமரசப்போக்கு கடைபிடிக்கப்படாது என்று அரசாங்கம் உத்தரவாதம் வழங்கியுள்ளது.
குறிப்பாக சிறார் குற்றவாளிகள் சம்பந்தப்பட்ட வழக்குகளைக் கையாள 2001ஆம் ஆண்டு சிறார் சட்டம் வரையப்பட்டதாகப் பிரதமர் துறை (சட்டம் மற்றும் நிறுவன சீர்திருத்தம்) அமைச்சர் டத்தோஸ்ரீ அசாலினா ஓத்மான் சைட் கூறினார்.
இந்த வழக்கை சிறார் ஆணையர் விளக்கியுள்ளார். மேலும் சிறார்கள் மீது குற்றம் சாட்டப்படக்கூடாது என பொருள்படும்படியான எந்த விளக்கத்தையும் அவர் கொடுக்கவில்லை. மாறாக சிறார்கள் மீது குற்றம் சாட்டப்பட்டால் நீதிமன்றத்தில் என்ன நடைமுறை இருக்கும் என்பதை அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்களுக்கு எந்த பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க
குற்றவியல் சட்டம் மற்றும் சிறார் சட்டம் தொடர்பில் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளையும் நாங்கள் வெளியிடுவோம் என்று நான் உத்தரவாதம் அளிக்கிறேன் என்று அவர் சொன்னார்.
இன்று கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் (கே.எல்.சி.சி.) நடைபெற்ற 2025 ஆசியான் சட்ட மன்ற ஆய்வரங்கில் கலநாது கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.
சிறார்கள் சட்ட ரீதியான தவறுகளைச் செய்தால் குற்றவியல் சட்டத்தின் விதிகளைப் பின்பற்றி குற்றம் சாட்டப்படலாம் என்று பெங்கெராங் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் மேலும் தெரிவித்தார்.
இருப்பினும், சிறார் குற்றவாளிகளுக்கு எதிராக வயது வந்த குற்றவாளிகளைப் போல வழக்கமான நீதித்துறை நடைமுறைகளை மேற்கொள்வதில்லை என்று அவர் விளக்கினார்.
யாருக்கும் விதிவிலக்கு கிடையாது - குற்றம் புரியும் சிறார்களும் நீதிமன்றத்தில் நிறுத்தப்படலாம்
20 ஆகஸ்ட் 2025, 7:53 AM


