கோத்தா கினபாலு, ஆக. 20 - ஒன்றாம் படிவ மாணவி ஸாரா கைரினா மகாதீருக்கு எதிராகக் கடந்த மாதம் அவமதிக்கும் வார்த்தைகளைப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் ஐந்து பதின்ம வயதுப் பெண்கள் இன்று இங்குள்ள சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
செசன்ஸ் நீதிமன்ற நீதிபதி விசா எல்சி பிரைமஸ் முன்னிலையில் உள் அறையில் அந்த விசாரணை நடைபெற்றது.
13 வயதான ஸாரா கைரினாவுக்கு தொந்தரவு ஏற்படுத்தும் வகையில் அவருக்கு எதிராக அவமதிக்கும் வார்த்தைகளைப் பயன்படுத்தியதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.
கடந்த ஜூலை 15 ஆம் தேதி இரவு 10.00 மணி முதல் 11.00 மணி வரை இங்கு அருகிலுள்ள துன் டத்து முஸ்தாபா லிமாவான் சமய உயர்நிலைப் பள்ளியின் ராபியதுல் அடாவியா விடுதியின் A-3-6 தங்குமிடத் தொகுதியில் இக்குற்றத்தைச் செய்ததாக ஐந்து அந்த மாணவிகள் மீதும் குற்றம் சுமத்தப்பட்டது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஒரு வருடம் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் 507சி (1) பிரிவு மற்றும் சட்டத்தின் பிரிவு 34 இன் கீழ் அவர்களுக்கு எதிராகக் குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டுள்ளது.
ஸாரா கைரினாவுக்கு எதிராக அவதூறு - ஐந்து பதின்ம வயது பெண்கள் மீது குற்றச்சாட்டு
20 ஆகஸ்ட் 2025, 7:32 AM


