கோலாலம்பூர், ஆகஸ்ட் 20 - முன்னதாக மூடப்பட்டிருந்த மெர்போக் திடல் விரைவில் பொதுமக்களுக்கான பொழுதுபோக்குப் பகுதியாக மீண்டும் திறக்கப்படவுள்ளது.
அந்த இடத்திற்கு சென்று ஆய்வு செய்த பிறகு, இம்முடிவு எடுக்கப்பட்டதாக பிரதமர் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சாலிஹா முஸ்தபா,
தெரிவித்துள்ளார்.
தனித்துவமான வரலாற்றை கொண்ட இப்பகுதி, மக்களின் பொழுதுபோக்கு மற்றும் ஓய்வு நடவடிக்கைக்காகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஆரோக்கியமான நகரம் என்ற பண்டார் 'சேஸ்' (CHASE) தொலைநோக்கு பார்வைக்கு ஏற்ப, குடும்பங்கள் மற்றும் சமூகங்களுக்கான பொழுதுபோக்கு இடமாக மெர்போக் திடலை பொதுமக்களுக்குத் திறக்குமாறு கோலாலம்பூர் மாநகர் மன்றத்திற்கு அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், விளக்குகள், பொதுக் கழிப்பறைகள் மற்றும் வருகையாளர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் கோலாலம்பூர் மாநகர் மன்றத்திற்கு உத்தரவிடப்பட்டது.
அதோடு, மெர்போக் திடல் மீண்டும் உயிர்ப்பிக்க சமூகத் திட்டம் ஒன்றை முன்னெடுக்கவும், அதனுடன் புதிய ஈர்ப்பாக தங்கும் விடுதிகளை அமைக்கும் திட்டமும் பரிசீலிக்கப்பட்டுள்ளது.