ஷா ஆலம், ஆக, 20 - சிலாங்கூர் குடிநுழைவுத் துறை இவ்வாண்டின் தொடக்கம் முதல் கடந்த ஜூலை வரை மேற்கொண்ட தொடர்ச்சியான நடவடிக்கைகளின் மூலம் மொத்தம் 3,367 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டனர்.
அவர்களில் மொத்தம் 1,030 பேர் தங்கள் சொந்த நாட்டிற்கு நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்ட வேளையில் 888 பேர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டப்பட்டதாக அதன் இயக்குனர் கைருல் அமினஸ் கமாருடின் கூறினார்.
மேலும் 315 பேருக்கு பல்வேறு குற்றங்களுக்காக அபராதம் விதிக்கப்பட்டது, அவர்களில் 1,134 பேர் விசாரணைக்குப் பிறகு விடுவிக்கப்பட்டனர் என்று அவர் குறிப்பிட்டார்.
மாவட்ட வாரியாக கைது செய்யப்பட்டவர்களின் விவரங்களைப் பட்டியலிட்ட அவர், பெட்டாலிங்கில் அதிகபட்சமாக 2,208 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் அதைத் தொடர்ந்து கிள்ளானில் 625 பேர் கைது பிடிபட்டனர். அவர்கள் அனைவரும் முறையே 283 மற்றும் 66 தொடர் நடவடிக்கைகளில் தடுத்து வைக்கப்பட்டனர் என்று அவர் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
பிடிபட்டவர்களில் 655 பேருடன் மியான்மர் நாட்டினர் முதல் இடத்தில் உள்ள வேளையில் அதைத் தொடர்ந்து இந்தோனேசியா (123), வங்காளதேசம் (98), இந்தியா (35), பாகிஸ்தான் (20) மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்தவர்கள் (46) இருப்பதாகவும் அவர் கூறினார்.
மொத்தம் 839 வழக்குகள் விசாரிக்கப்பட்டன.
அதில் அதிக காலம் நாட்டில் தங்கியிருப்பது தொடர்பில் 422 பேரும் அதனைத் தொடர்ந்து செல்லுபடியாகும் பாஸ்போர்ட் அல்லது பாஸ் இல்லாமல் நாட்டிற்குள் நுழைந்து தங்கியிருப்பதது தொடர்பில் 384 பேரும் விசாரிக்கப்பட்டனர். குடிநுழைவுச் சட்டத்தின் 15(1)(c) மற்றும் 6(1)(c) பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சிலாங்கூர் குடிநுழைவுத் துறை அதிரடி- 1,030 அந்நிய நாட்டினர் வெளியேற்றம், 888 பேர் மீது நடவடிக்கை
20 ஆகஸ்ட் 2025, 6:35 AM




