பகடிவதை கலாச்சாரத்தைக் கட்டுப்படுத்த, அரசாங்கம் விழிப்புணர்வு பிரச்சாரத்தை செயல்படுத்த வேண்டும்
கோலாலம்பூர், ஆகஸ்ட் 19 - ஆரம்பப் பள்ளியில் இருந்தே பகடிவதை செயலை கட்டுப்படுத்த, அரசாங்கம் விழிப்புணர்வு பிரச்சாரத்தை செயல்படுத்த வேண்டும் என்று மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் தெரிவித்திருக்கின்றார்.
ஆரம்பப் பள்ளியிலேயே அதனைக் கட்டுப்படுத்தாவிட்டால், சக மனிதர்கள் மீதான மரியாதை மற்றும் அன்பின் மதிப்பை இழந்த ஒரு தலைமுறையை உருவாக்கும் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளதாக மாமன்னர் எடுத்துரைத்தார்.
பகடிவதையினால் பாதிக்கப்பட்டவர்கள் மன உழைச்சல் மற்றும் பல துயரங்களுக்கு ஆளாக நேரிடும் என்று மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் தமது முகநூலில் வெளியிட்ட பதிவின் வழி தெரிவித்தார். சிறு வயதில் இருந்தே குழந்தைகளுக்கு இது குறித்து விளக்க வேண்டும்.
மேலும் இந்த பிரச்சாரத்தின் மூலம் மரியாதை மற்றும் ஒழுக்கத்தை அவர்கள் புரிந்துக் கொள்ள முடியும் என்று மாமன்னர் கூறினார்.


