கோலாலம்பூர், ஆகஸ்ட் 19 - இந்திய உருமாற்றுப் பிரிவான மித்ராவின் கீழ் சில புதிய திட்டங்களை பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மக்களவையில் இன்று அறிவிப்பார்.
இந்தியர்கள் மற்றும் மித்ரா விவகாரங்கள் தொடர்பான கேள்விகள் மற்றும் பிரச்சனைகளுக்கு பதிலளிக்கும் பொறுப்பில் இருக்கும், தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு துணை அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன், மக்களவையில் நடைபெற்ற 13-வது மலேசியத் திட்டம், ஆர்.எம்.கே 13 தொடர்பான விவாத நிறைவில் அதனை உறுதிப்படுத்தினார்.
மித்ரா கீழ் திட்டங்களை வடிவமைப்பதில் அரசாங்கம் மிகவும் மூலோபாய மற்றும் பயனுள்ள அணுகுமுறையை ஏற்றுக்கொள்ளும் என்று துணை தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன் கூறினார்.
"இந்த முயற்சிகள் இந்திய சமூகத்தின் சமூக-பொருளாதார வளர்ச்சியில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும், நாட்டின் வளர்ச்சியிலிருந்து அவர்கள் தொடர்ந்து பயனடைவதை உறுதி செய்யும் என்று தாம் நம்புவதாக அவர் தெரிவித்தார்.
-- பெர்னாமா