வெரின், ஆகஸ்ட் 18 - ஸ்பெயின் வெரினில் ஏற்பட்ட காட்டுத் தீயினால் 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அட்டாலியா கோட்டை ஆபத்தை எதிர்நோக்கியுள்ளது.
1766 மற்றும் 1777-ஆம் ஆண்டுகளுக்கு இடையில் குரோஷியாவின் இராணுவப் பொறியியளாலர் ஒருவரால் இக்கோட்டை கட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான கோடைக்காலத்தில், தெற்கு ஐரோப்பா முழுவதும் பரவி வரும் காட்டுத் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.
இதுவரை இச்சம்பவத்தினால் எழுவர் பலியாகியிருப்பதாக காவல்துறை தெரிவித்தது.


