மேற்குக் கரை  குடியேற்ற கட்டுமானத்தை நிறுத்த ஜெர்மனி வலியுறுத்து

16 ஆகஸ்ட் 2025, 4:57 AM
மேற்குக் கரை  குடியேற்ற கட்டுமானத்தை நிறுத்த ஜெர்மனி வலியுறுத்து

பெர்லின், ஆக. 16- மேற்குக் கரையில் காலனித்துவ குடியேற்ற கட்டுமானத்தை நிறுத்துமாறு இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அரசாங்கத்தை ஜெர்மனி வலியுறுத்தியுள்ளது.

ஆயிரக்கணக்கான காலனித்துவ குடியிருப்புகளை  கட்டும் திட்டங்களை தீவிர வலதுசாரி இஸ்ரேலிய நிதியமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச் அறிவித்ததைத் தொடர்ந்து ஜெர்மனி  இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளது.

ஆயிரக்கணக்கான புதிய காலனித்துவ குடியிருப்புகளை  கட்டுவதற்கான இஸ்ரேலிய அரசாங்கத்தின் ஒப்புதலை பெர்லின் கடுமையாக நிராகரிப்பதாக ஜெர்மன் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

இக்காலனியைக் கட்டமைத்து மாலே அடுமிம் காலனித்துவக் குடியேற்றத்தை விரிவுபடுத்தும் திட்டங்கள்  மேற்குக் கரையில் பாலஸ்தீன குடியிருப்பாளர்களின் நடமாட்டத்தை மேலும் கட்டுப்படுத்தும் என்பதோடு  அந்தப் பகுதியை பாதியாகப் பிரித்து கிழக்கு ஜெருசலமிலிருந்து தனிமைப்படுத்தும் அதன் செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டார்.

மேற்குக் கரையில் காலனித்துவக் குடியேற்றக் கட்டுமானம் அனைத்துலக  சட்டம் மற்றும் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு மன்றத்  தீர்மானங்களை மீறுவதால் அதனை நிறுத்துமாறு ஜெர்மனி இஸ்ரேலிய அரசாங்கத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளது.

பேச்சுவார்த்தைகள் மூலம் இரு நாட்டுத் தீர்வை அடைவதற்கும் மேற்குக் கரையின் ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும் மேற்கொள்ளும் முயற்சிகளை இதுபோன்ற  நடவடிக்கைகளை சிக்கலாக்குகின்றன என்று அவர் மேலும் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.