ஷா ஆலம், ஆகஸ்ட் 15: 2019 முதல் 2024 வரை 61 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட ஓட்டுநர்கள் சம்பந்தப்பட்ட சாலை விபத்துகளால் கிட்டத்தட்ட 7,000 இறப்புகள் பதிவாகியுள்ளன.
ஆறு ஆண்டு காலத்தில், 19,812 மூத்த குடிமக்கள் சாலை விபத்துக்களில் சம்பந்தப்பட்டுள்ளனர் என பதிவாகியுள்ளதாக புக்கிட் அமான் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத் துறை (JSPT) இயக்குநர் டத்தோஸ்ரீ முகமட் யுஸ்ரி ஹசன் பாஸ்ரி கூறுகையில்,
அதில் 6,733 ஓட்டுநர்கள் இறந்ததாகவும், 2,132 பேர் படுகாயமடைந்ததாகவும், மீதமுள்ள 10,947 பேர் சிறிய காயங்களுக்கு உள்ளானதாகவும் தரவுகள் காட்டுகின்றன என்று அவர் கூறினார்.
"சம்பந்தப்பட்ட மொத்த சாலை பயனர்களில், 13,597 பேர் 60 முதல் 70 வயதுடையவர்கள், மேலும் 6,215 பேர் 71 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள்" என்று அவர் கூறினார்.
விபத்துகளுக்கு வயது ஒரு காரணியாக இல்லாவிட்டாலும், எதிர்காலத்தில் இந்தப் பிரச்சனையைச் சமாளிக்க இந்த அம்சத்தை வலியுறுத்த வேண்டும் என்று முகமட் யுஸ்ரி விளக்கினார்.
மூத்த குடிமக்கள் தொடர்ந்து வாகனம் ஓட்டுவதைத் தடுக்கவில்லை, மாறாக சாலைப் பயனரின் சுகாதார நிலையைத் தீர்மானிக்க ஒரு வழிமுறையை ஆராய விர்ம்புகிறோம். இதனால் அனைத்து தரப்பினரின் பாதுகாப்பையும் உறுதி செய்ய முடியும் என அவர் விளக்கினார்.
"மலேசியாவின் கலாச்சாரம் வேறுபட்டது என்பதால், இந்தக் குழு வாகனம் ஓட்டுவதைத் தடுப்பது எளிதான காரியமல்ல என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். அவர்களில் சிலர் வெளியே செல்லவும், தங்கள் பேரக்குழந்தைகளை பள்ளியிலிருந்து அழைத்து வரவும் வாகனங்களைப் பயன்படுத்துகிறார்கள்.
"ஆனால் அதே நேரத்தில், விபத்துகளின் அபாயத்தைக் குறைக்க அவ்வப்போது சாலைகளில் அனைத்து பயனர்களுக்கும் எப்போதும் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வதும் JSPT இன் பணி ஆகும்," என்று அவர் கூறினார்.


