கோலாலம்பூர், ஆகஸ்ட் 15 - சிலாங்கூர் அரசாங்கத்தின் கிள்ளான் ஆறு வெள்ளத் தடுப்புத் திட்டத்தின் கீழ் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பணிகள் தொடங்கியதிலிருந்து இதுவரை மொத்தம் 16 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மேலும், ஆற்றில் வெள்ளத் தடுப்பு திட்டத்தின் பகுதியில் பல இடங்களில் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
ஆற்றை சுத்தம் செய்யும் பணிகள், ஆற்றுப் படுகை அகழ்வாராய்ச்சி அல்லது பராமரிப்பு குழுக்கள் மற்றும் அமலாக்க நிறுவனங்களின் வழக்கமான ரோந்துகளின் போது கூட சடலங்கள் கண்டுப்பிடிக்ப்பட்டன.
இருப்பினும், 16 உடல்களின் பிரேதப் பரிசோதனைகளில் அடையாளம் காணக்கூடிய குற்றவியல் கூறுகள் எதுவும் கண்டறியப்படவில்லை, சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்ட நேரத்தில் உடல்கள் ஏற்கனவே கடுமையாக சிதைந்திருந்ததே இதற்குக் காரணம் என்று நாடாளுமன்ற எழுத்துப்பூர்வப் பதிலில் உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.