ஷா ஆலம், ஆகஸ்ட் 15 - நாளை சிலாங்கூர் குடிமக்கள் நலச் சங்கம், கிள்ளான் நாடாளுமன்ற சமூக சேவை மையத்துடன் இணைந்து இரத்தத் தான பிரச்சாரத்தை ஏற்பாடு செய்துள்ளது.
மருத்துவமனைகளில் இரத்த விநியோகத்தை அதிகரிக்கும் நோக்கில் இந்நிகழ்வு காலை 10.30 முதல் மாலை 4 மணி வரை AEON புக்கிட் திங்கி ஷோப்பிங் செண்டர், கிள்ளானில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.
தானம் செய்யும் ஒவ்வொரு துளி இரத்தமும், விபத்தானவர்கள், பிரசவிக்கும் தாய்மார்கள், புற்றுநோயாளிகள் மற்றும் பலரின் உயிரை காக்கும் என்பதனால் பொதுமக்கள் இரத்தத் தானம் செய்ய ஊக்குவிக்கப்படுகிறார்கள்.


