கோலாலம்பூர், ஆகஸ்ட் 14 - 2016-2022ஆம் ஆண்டுக்கான மாற்றுத்திறனாளி செயல் திட்டத்தின் தொடர்ச்சியாக புதிய மாற்றுத்திறனாளி செயல் திட்டத்தை (PTOKU) மகளிர், குடும்ப மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சு உருவாக்கி வருகிறது.
மேலும், அரசு சாரா அமைப்புகள், பொது சமூக அமைப்புகள், கல்வியாளர்கள், தேசிய மாற்றுத்திறனாளிகள் மன்ற உறுப்பினர்கள், அமைச்சுகள் மற்றும் தொடர் கலந்துரையாடல்களில் ஈடுபட்டு வரும் அரசு நிறுவனங்கள் வழங்கும் கருத்துகள் அடிப்படையில் இப்புதிய திட்டம் உருவாக்கப்படும் என அதன் துணை அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் நோராய்னி அஹ்மாட் தெரிவித்தார்.
"தற்போதுள்ள திட்டத்திற்கான 69.09 விழுக்காடு அடைவுநிலையை தேசிய மாற்றுத்திறனாளிகள் மன்றம் கண்டறிந்துள்ளது. புதிய திட்டத்தில் அதை அதிகரிக்க அந்த மன்றம் பரிந்துரைக்கிறது", என்றார் அவர்.
PTOKU திட்டம் செயல்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்கும், இது தொடர்பாக அனைத்து தரப்பினரின் பொறுப்புணர்வை அதிகரிப்பதற்கும் ஒவ்வொரு அமைச்சும் நிறுவனமும் பொறுப்பு வகிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
-- பெர்னாமா


