மாநில அரசின் இலவச ஆம்புலன்ஸ் சேவை இந்த ஆண்டு இறுதிக்குள் தொடங்கப்படும்.

12 ஆகஸ்ட் 2025, 10:39 AM
மாநில அரசின் இலவச ஆம்புலன்ஸ் சேவை இந்த ஆண்டு இறுதிக்குள் தொடங்கப்படும்.

ஷா ஆலம், ஆகஸ்ட் 12: ஆம்புலன்ஸ் கித்தா சிலாங்கூர் திட்டத்தின் மூலம் மாநில அரசின் இலவச ஆம்புலன்ஸ் சேவை இந்த ஆண்டு இறுதிக்குள் தொடங்கப்படும்.

தற்போதுள்ள ஆம்புலன்ஸ் சேவை போல் அதன் சேவை இல்லாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக, இத்திட்டம் தொடர்புடைய தரப்பினருடன் விவாதிக்கப்பட்டு வருவதாக சுகாதார ஆட்சிக்குழு உறுப்பினர் தெரிவித்தார்.

"எந்த வகையான சூழ்நிலைக்கு இச்சேவை வழங்கப்படும் என்பதை நாங்கள் விவாதித்து வருகிறோம், பெரும்பாலும் அவசரமற்ற சம்பவங்கள் போன்றவை அடங்கும்.

"உண்மையில் உதவி தேவைப்படுபவர்களை இலக்காகக் கொள்ளும் வகையில் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை நாங்கள் செம்மைப்படுத்துகிறோம்," என்று ஜமாலியா ஜமாலுடின் மீடியா சிலாங்கூரிடம் கூறினார்.

முன்னதாக, நேற்று செல்கேட் ராவாங் சிறப்பு மருத்துவமனையின் ஊழியர்களுடன் இணைந்து அங்குள்ள முழு வசதியையும் பார்வையிட்ட பின்னர் அவர் இவ்வாறு கூறினார்.

கடந்த ஜூலை மாதம், தேவைப்படுபவர்களுக்கு இலவச அவசரமற்ற ஆம்புலன்ஸ் சேவைகளை வழங்கும் ஆம்புலன்ஸ் கித்தா சிலாங்கூர் திட்டத்தை ஜமாலியா அறிவித்தார்.

இந்த முயற்சியை செயல்படுத்துவதில் ``St John Ambulans`` மலேசியா சிலாங்கூர் ஒரு முக்கியமான மூலோபாய பங்காளியாக செயல்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.