துருக்கி, ஆகஸ்ட் 12 - துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 29 பேர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
மேலும், ரிக்டர் அளவு 6.1ஆக பதிவான இந்நிலநடுக்கத்தினால் 16 கட்டிடங்களும் இடிந்து விழுந்ததாக அந்நாட்டின் உள்துறை அமைச்சர் அலி யெர்லிகயா தெரிவித்தார்.
உள்ளூர் நேரப்படி இரவு மணி 7:53 அளவில் நிகழ்ந்த இந்நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட அதிர்வுகள், துருக்கியின் மிகப்பெரிய நகரமான இஸ்தான்புல் உட்பட பல மாகாணங்களில் உணரப்பட்டதாக, அந்நாட்டின் அஃபாட் பேரிடர் நிர்வகிப்பு நிறுவனம் தெரிவித்தது.
இந்நிலையில், இடிபாடுகளில் சிக்கிக்கொண்ட 81 வயது முதியவர் உயிரிழந்ததாக யெர்லிகயா கூறினார். இந்நிலையில் அங்கு தேடல் மற்றும் மீட்புப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலநடுக்கம் 11 கிலோமீட்டர் ஆழத்திற்கு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
-- பெர்னாமா


