ஷா ஆலம், ஆக. 10 - இன்று இங்கு நடைபெற்ற ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் (எம்.பி.எஸ்.ஏ.) வெள்ளி விழா நிகழ்வுக்கு சிலாங்கூர் தெங்கு அமீர் ஷா ராஜா மூடா தலைமை தாங்கினார்.

இங்குள்ள டத்தாரான் கெமெர்டேக்காஹானில் நடைபெற்ற 25வது ஆண்டு விழாவில் சிலாங்கூர் இஸ்லாமிய சமய மன்றத்தின் மெர்டேக்கா ஓட்டம், ராக்கான் மூடா காலர் வேடிக்கை ஓட்டம், இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறையின் மாற்றுத்திறனாளிகள் ஓட்டம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் இடம்பெற்றன.
இந்த நிகழ்வு ஷா ஆலம் வாகன பயன்பாடு இல்லாத தினத்துடன் இணைந்து நடைபெற்றது. இந்த
மூன்று ஓட்டப் போட்டிகளையும் ராஜா மூடா தொடக்கி வைத்தார். இளைஞர், விளையாட்டு மற்றும் தொழில்முனைவோருக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் முகமட் நஜ்வான் ஹலிமி, ஷா ஆலம் டத்தோ பண்டார் டத்தோ முகமது பவுஸி முகமது யாத்திம் மற்றும் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
தேசிய தினத்திற்கு முன்னதாக தேசபக்தி உணர்வை ஏற்படுத்தும் முயற்சியின் அடையாளமாக பவுஸி "மெர்டேக்கா" என்று மூன்று முறை முழக்கமிட்டார். கூடியிருந்த பார்வையாளர்கள் பலத்த கைதட்டல்களை எழுப்பினர்.


