கோலாலம்பூர், ஆக 8 - ஆகஸ்ட் 11 முதல் 15 வரை தெற்கு நோக்கிச் செல்லும் செர்டாங் லே-பையில் (Lay-by) 308.20 ஆவது கிலோமீட்டரில் உள்ள காண்கிரிட் நடைபாதை இரவு முழுவதும் பராமரிப்பு பணிகளுக்காக மூடப்படும் என்று பிளஸ் மலேசியா தெரிவித்துள்ளது.
ஐந்து நாட்கள் லே-பையில் உள்ள நுழைவுப் பாதை, உணவுக் கடைகள் மற்றும் ஓய்வறைகள் தற்காலிகமாக இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை செயல்படாது.
நெடுஞ்சாலை உள்கட்டமைப்பு மற்றும் பயனர் வசதியை மேம்படுத்துவதற்கான திட்டங்களின் ஒரு பகுதியாக இந்த பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதாக பிளஸ் நெடுஞ்சாலை நிறுவனம் தெரிவித்துள்ளது.
நெடுஞ்சாலை பயனர்கள் தங்கள் பயணத்தை பிளஸ் செயலியைப் பயன்படுத்தி திட்டமிடவும், போக்குவரத்து வழிமுறைகளுக்கு இணங்கவும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
புத்ரி மெய்நிகர் உதவியாளர், X@plustrafik செயலி, மின்னணு அடையாள பலகைகள் மற்றும் பிளஸ் லைன் மூலம் போக்குவரத்து தொடர்பான விவரங்களை வாகன ஓட்டுனர்கள் பெறலாம்.