தாய்லாந்து-கம்போடியா போர் நிறுத்தம் - மலேசியா  தலைமையில் கண்காணிப்புக் குழு

8 ஆகஸ்ட் 2025, 2:46 AM
தாய்லாந்து-கம்போடியா போர் நிறுத்தம் - மலேசியா  தலைமையில் கண்காணிப்புக் குழு

பேங்காக், ஆக. 8 - கடந்த ஜூலை மாதம்  28ஆம் தேதி  எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் செயல்படுத்துவதை கண்காணிக்க மலேசிய பாதுகாப்பு தூதர் இணைப்பாளரின் தலைமையில் ஆசியான் நாடுகளின் பாதுகாப்பு இணைப்பாளர்களைக் கொண்ட இடைக்கால பார்வையாளர் குழு  தாய்லாந்து-கம்போடியா எல்லையின் இருபுறமும் நிறுத்தப்படும்.

தாய்லாந்து மற்றும் கம்போடியாவை தளமாகக் கொண்ட ஆசியான் தூதரகங்களின் பாதுகாப்பு அதிகாரிகளை அந்த பார்வையாளர்  குழுவில் இடம் பெற்றிருப்பர் என்று தாய்லாந்து  வெளியுறவு அமைச்சின் தகவல் துறை தலைமை இயக்குநர்  நிகோர்ண்டேஜ் பாலங்குரா தெரிவித்தார்.

அந்த கண்காணிப்புக் குழு அண்டை நாடுகளின் எல்லைக்குள் நுழையாமல் தத்தம் நாட்டு எல்லையில் வழக்கமான கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று அவர் நேற்று செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

கோலாலம்பூரில் நேற்று நடைபெற்ற பொது எல்லைக் குழுவின் (ஜிபிசி) சிறப்புக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட  முக்கிய முடிவுகளில் ஒன்று  பார்வையாளர் குழுவை அமைப்பதும் ஒன்றாகும் என்று அவர் தெரிவித்தார்.

தாய்லாந்தும் கம்போடியாவும் முழுமையான போர்நிறுத்தத்திற்கான தங்கள் நிலைப்பாட்டை புதுப்பித்த அதேவேளையில் இராணுவ நகர்வுகள் மற்றும் தவறான தகவல்கள் அல்லது சரிபார்க்கப்படாத செய்திகளைப் பரப்புதல் உள்ளிட்ட எந்தவொரு சினமூட்டும் நடவடிக்கைகளையும் தவிர்க்க ஒப்புக்கொண்டதாக
நிகோர்ண்டேஜ்  குறிப்பிட்டார்.

இரு தரப்பினரும் தற்போதுள்ள இருதரப்பு வழிமுறைகள் மூலம் வெளிப்படையான தொடர்பு வழிகளைப் கடைபிடிப்பார்கள் எனவும் ஒப்புக் கொள்ளப்பட்டது என்று அவர் கூறினார்.

இன்றைய தேதியிலிருந்து ஒரு மாதத்திற்குள் அடுத்த ஜிபிசி கூட்டத்தை நடத்த தாய்லாந்தும் கம்போடியாவும் ஒப்புக்கொண்டதாக நிகோர்ண்டேஜ் தெரிவித்தார்.

இதற்கிடையில், எட்டப்பட்ட ஒப்பந்தத்தை செயல்படுத்துவதை ஒருங்கிணைக்க பிராந்திய எல்லைக் குழுவின் (ஆர்.பி.சி.) தொடர் கூட்டம் இரண்டு வாரங்களுக்குள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

கம்போடிய துணைப் பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான ஜெனரல் டீ சேய்ஹா மற்றும் தாய்லாந்தின் இடைக்கால பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் நட்டாபோன் நார்க்பானிட் ஆகியோர் கூட்டாக  இந்த பிரத்தியேகக் கூட்டத்திற்குத் தலைமை தாங்குவர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.