புத்ரஜெயா, ஆகஸ்ட் 5: பயிற்சி மற்றும் சோதனை இல்லாமல் ஓட்டுநர் உரிமங்களுக்கான போலி விளம்பரங்கள் அல்லது சமூக ஊடகங்கள் வழியாகப் பரப்பப்படும் "காபி ஓ உரிமங்கள்" என்று அழைக்கப்படும் விளம்பரங்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு சாலைப் போக்குவரத்துத் துறை (JPJ) பொதுமக்களுக்கு நினைவூட்டுகிறது.
``Sekolah Memandu Jaya`` என்ற கணக்கின் பெயரைப் பயன்படுத்தும் விளம்பரம், பொதுமக்களை தவறாக வழிநடத்தும் நோக்கத்துடன், போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக்கின் படத்தைப் பயன்படுத்தி சோதனை இல்லாமல் ஓட்டுநர் உரிமங்களை வைத்திருப்பதை ஊக்குவிக்கும் வகையில் அமைந்திருப்பதாக சாலைப் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
"இந்த விளம்பரமும் கணக்கும் போலியானவை என்பதை சாலைப் போக்குவரத்துத் துறை வலியுறுத்த விரும்புகிறது.
"குழப்பம் மற்றும் இழப்புகளைத் தவிர்க்க, இது போன்ற செல்லாத கணக்குகள் மூலம் பரப்படும் விளம்பரங்களால் பொதுமக்கள் எளிதில் ஏமாற வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது," என்று சாலைப் போக்குவரத்துத் துறை ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கூடுதல் தகவல்களுக்கு சாலைப் போக்குவரத்துத் துறையை நாட அல்லது தொடர்பு கொள்ள பொதுமக்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள். மேலும் எந்தவொரு அதிகாரப்பூர்வ புகார்களையும் சாலைப் போக்குவரத்துத் துறையின் அதிகாரப்பூர்வ புகார் தளம் https://jpj.spab.gov.my/ வழியாக அனுப்பலாம்.
-- BERNAMA