ஷா ஆலம், ஆக. 4- ஆடி திருவிழாவை உலகம் முழுவதும் உள்ள இந்துக்கள் நேற்று வெகு விமரிசையாக கொண்டாடினர். அம்மன் மாதமாக கொண்டாடப்படும் ஆடி மாதம் 18ஆம் தேதி கொண்டாடப்படும் இந்த விழாவின் சிறப்பு அம்சமாக விளங்குவது ஆடிப் பெருக்கு நிகழ்வாகும்.
ஆறு, குளம் போன்ற நீர் நிலைகளுக்கு நன்றி தெரிவிக்கும் இந்த ஆடி பெருக்கின் போது புதுமணத் தம்பதிகள் தங்களின் திருமண மாலைகளை ஓடும் நீரில் விட்டு தங்கள் வாழ்க்கையும் வம்சமும் தழைக்க இறைவனைவேண்டிக் கொள்வார்கள்.
மலேசியாவைப் பொறுத்த வரை இத்தகைய சடங்குகளுக்கு புகழ் பெற்ற இடமாக விளங்குவது மோரிப் கடற்கரை ஆகும். ஒவ்வோராண்டும் ஆடி பெருக்கின் போது இந்துக்களின் புண்ணிய தளமாக மாறி விடும் இந்த மோரிப் கடற்கரையில் சிறப்பு கலை நிகழ்ச்சி நடைபெறுவது ஒரு வருடாந்திர நிகழ்வாக மாறி விட்டது.
அந்த வகையில் இவ்வாண்டும் ஆடி பெருக்கு திருவிழா மோரிப் கடற்கரையில் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை கோல லங்காட் நாடாளுமன்ற ஒருங்கிணைப்பாளர் ஹரிதாஸ் ராமசாமி, கோல லங்காட்நகராண்மைக் கழக உறுப்பினர்களின் ஆதரவுடன் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தார்.
கிட்டத்தட்ட 100 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் இந்த ஆடிப்பெருக்குகலை விழா தங்களின் சமயம், கலை மற்றும் கலாச்சாரத்தைகட்டிக்காப்பது மக்கள் காட்டி வரும் சிரத்தையை புலப்படுத்தும் விதமாகஅமைந்துள்ளது என்று ஹரிதாஸ் தமதுரையில் குறிப்பிட்டார்.
இந்த ஆடி பெருக்கு விழா நீண்ட காலமாக நடத்தப்பட்டு வந்த போதிலும்மாநில அல்லது தேசிய அளவில் இதற்கு இதுநாள் வரை அங்கீகாரம்இல்லாமல் இருந்து வருகிறது. நாட்டின் வருடாந்திர கலாச்சாரநிகழ்வுகளில் ஒன்றாக அடி பெருக்கு விழாவை இடம் பெறச் செய்வதற்கான முயற்சியில் நான் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறேன் என அவர் கூறினார்.
நாட்டின் கலாச்சார பன்முகத் தன்மை நமக்கு பாலமாக விளங்குகிறது. ஆகவே, இந்த ஆடி பெருக்கு விழாவும் இதன் முக்கிய கலாச்சாரவிழாக்களுக்கு இணையாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.
இத்தகையவிழாக்கள் நல்லிணக்கத்தை வளர்க்கும் அதேவேளையில் சுற்றுப்பயணிகளை குறிப்பாக வெளிநாட்டினரை ஈர்ப்பதன் மூலம் கோலலங்காட் மாவட்டத்தில் பொருளாதார நடவடிக்கைகள் புத்துயிர்பெறுவதற்கும் வாய்ப்பினையும் ஏற்படுத்தும் என்றார் அவர்.
இந்த ஆடி பெருக்கு விழா சிறப்பான முறையில் நடை பெறுவதற்கு உறுதுணையாக இருந்த அனைத்து தரப்பினருக்கும் தாம் நன்றிதெரிவித்துக் கொள்வதாக அவர் தனதுரையில் குறிப்பிட்டார்.