ஷா ஆலம், ஆக. 4- தேசிய தினத்தை முன்னிட்டு மந்திரி புசார் இம்மாதம் 29 ஆம் தேதி துறைத் தலைவர்கள் மற்றும் சமூக பிரதிநிதிகள் மத்தியில் சிறப்புரை நிகழ்த்துவார்.
நாட்டின் எதிர்கால இலக்கு, குறிப்பாக முதலாவது சிலாங்கூர் திட்டம் (RS-1) மற்றும் ஸ்மார்ட் சிலாங்கூர் செயல் திட்டம் ஆகியவை அந்த உரையின் முக்கியமான அம்சங்களாக விளங்கும் என்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
வழக்கம் போல் வரும் ஆகஸ்ட் 30 ஆம் தேதி தேசிய தின கொண்டாட்டத்தை நடத்துவோம். இதில் ஒரு வித்தியாசம் என்னவென்றால் ஆகஸ்ட் 29 ஆம் தேதி துறைத் தலைவர்கள் மற்றும் சமூகப் பிரதிநிதிகளுக்கு ஒரு சிறப்புச் செய்தி வழங்கப்படும்.
வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சிறப்புரையை வழங்கவிருக்கிறார். அதே போல் சிலாங்கூருக்கும் 2026 ஆம் ஆண்டுக்கான ஒரு சிறப்புரை உள்ளது. முதலாவது சிலாங்கூர் திட்டம் மற்றும் விவேக சிலாங்கூர் (ஸ்மார்ட் சிலாங்கூர் செயல் திட்டம்) போன்ற திட்டங்கள் முழுமை பெறுவதை இந்த உரை நோக்கமாக கொண்டுள்ளது என்று அவர் கூறினார்.
.
இன்று இங்குள்ள பேராக் ஜூப்ளி பேராக் அரங்கில் நடைபெற்ற சிலாங்கூர் மாநில விநியோக முறை மற்றும் நிர்வாக சீர்திருத்த நிகழ்வின் தொடக்க விழாவிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார். இந்நிகழ்வில் அரசு ஊழியர்களுடனான சந்திப்பும் தேசிய கொடியை பறக்கவிடும் நிகழ்வும் நடைபெற்றது.
முன்னதாக, ஆயிரக்கணக்கான அரசு அதிகாரிகள் உடனான கூட்டத்தில் உரையாற்றிய அமிருடின், மலேசியா ஒரு இறையாண்மை கொண்ட நாடாக உருவான வரலாற்றைப் போற்றுமாறு அனைவருக்கும் நினைவூட்டினார்.
தேசிய தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 29 ஆம் தேதி மந்திரி புசார் சிறப்புரை வழங்குவார்
4 ஆகஸ்ட் 2025, 8:21 AM


