யுபிஎம் சாலை விபத்தில் தொடர்புடைய பேருந்து ஆபரேட்டரை விசாரிக்கவுள்ளது
கோலாலம்பூர், ஆகஸ்ட் 3 - சமீபத்தில் செர்டாங்கில் உள்ள ஜாலான் பெர்சியாரன் யுனிவர்சிட்டி 1, யுனிவர்சிட்டி புத்ரா மலேசியா (யுபிஎம்) வழியாக மழலையர் பள்ளி குழுவை ஏற்றிச் செல்லும் போது ஏற்பட்ட விபத்து குறித்து நிறுவனத்தின் மீது சாலை போக்கு வரத்துத் துறை (ஜேபிஜே) பாதுகாப்பு ஆய்வு மற்றும் தணிக்கை (ஜிசா) மேற்கொள்ளும்.
அதன் இயக்குநர் ஜெனரல் டத்தோ அடி ஃபாட்லி ராம்லி, நேற்று இந்த சம்பவம் குறித்த அறிக்கையைப் பெற்றதாகவும், மேலும் விசாரணைக்காக அதை காவல்துறையிடம் ஒப்படைத்ததாகவும் கூறினார்.
"ஜேபிஜே பஸ் ஆபரேட்டர் மீது ஒரு ஜிசா நடத்தும் மற்றும் தணிக்கை அறிக்கை முடிந்ததும் அடுத்த நடவடிக்கை எடுக்கும்" என்று அவர் இன்று பெர்னாமாவிடம் கூறினார்.
நேற்று, செர்டாங் மாவட்ட காவல் துறைத் தலைவர் ஏ. சி. பி முகமது ஃபரித் அகமது கூறுகையில், மதியம் 12.18 மணிக்கு நடந்த இந்த சம்பவத்தில், ஐந்து ஆசிரியர்கள் மற்றும் 30 மழலையர் பள்ளி குழந்தைகளை ஏற்றிச் சென்ற பேருந்து சம்பந்தப்பட்டு இருந்தது.
சமூக ஊடகங்களில் வைரலாகிய டாஷ்கேம் காட்சிகள், பஸ் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் இருந்து விலகி ஒரு மரத்தில் மோதியதைக் காட்டியது.
மூன்று குழந்தைகள் மற்றும் ஒரு ஆசிரியர் தலையில் காயம் அடைந்து செர்டாங் மருத்துவமனையில் வெளிநோயாளிகளாக சிகிச்சை பெற்றனர், அதே நேரத்தில் சாலை போக்குவரத்துச் சட்டம் 1987 இன் பிரிவு 42 இன் கீழ் விசாரணைகளுக்கு உதவ பேருந்து ஓட்டுநர் தடுத்து வைக்கப்பட்டார்.
இதற்கிடையில், ஒரு அறிக்கையில், போதுமான ஓய்வு இல்லாததால் பஸ் டிரைவர் மைக்ரோ ஸ்லீப்பில் விழுந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக நம்பப்படுகிறது என்று ஃபரித் கூறினார்.
விசாரணையில் உதவுவதற்காக 44 வயதான ஆண் ஓட்டுநர் இன்று முதல் இரண்டு நாட்களுக்கு காவலில் வைக்கப் பட்டுள்ளார்.
சம்பவத்தின் போது ஓட்டுநர் போதைப்பொருள் அல்லது ஆல்கஹால் போதையில் இல்லை என்பதும் முதற்கட்ட விசாரணையில் கண்டறியப் பட்டது.
"இருப்பினும், அவரது பெயரில் 13 போக்குவரத்து சம்மன்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பதிவுகள் காட்டுகின்றன" என்று அவர் கூறினார்.


