ஷங்காய், ஆகஸ்ட் 1 - இவ்வாண்டின் எட்டாவது சூறாவளியான கோ-மெய், புதன்கிழமை கிழக்கு சீனாவின் ஷங்காய் நகரில் இரண்டாவது முறையாக தாக்கியது.
சூறாவளியின் மையப்பகுதிக்கு அருகில் அதிகபட்ச காற்றின் வேகம் விநாடிக்கு 23 மீட்டராகவும் குறைந்தபட்ச வளிமண்டல அழுத்தம் 978-ஆகவும் பதிவாகியது.
அதனை தொடர்ந்து, சூறாவளியை எதிர்கொள்ளும் விதமாக, Fengxian மாவட்டம் தொடக்க கட்ட ஏற்பாடுகளை மேற்கொண்டது.
இதில் அபாயங்களைக் கண்டறிந்து வெளியேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்வது மற்றும் ஆபத்தான பகுதிகளில் இருந்து குடியிருப்பாளர்களை இடமாற்றம் செய்வது ஆகியவையும் அடங்கும்.
செவ்வாய்க்கிழமை தொடங்கி அம்மாவட்டத்தில் சுற்றுலா தலங்கள் மூடப்பட்டன. 71 மீன்பிடி படகுகளும் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டன
--பெர்னாமா


