NATIONAL

ஸ்மார்ட் சிலாங்கூர் செயல்பாட்டு மைய விளக்க அமர்வில் 19 சர்வதேச பங்கேற்பாளர்கள்

30 ஜூலை 2025, 9:57 AM
ஸ்மார்ட் சிலாங்கூர் செயல்பாட்டு மைய விளக்க அமர்வில் 19 சர்வதேச பங்கேற்பாளர்கள்
ஸ்மார்ட் சிலாங்கூர் செயல்பாட்டு மைய விளக்க அமர்வில் 19 சர்வதேச பங்கேற்பாளர்கள்
ஸ்மார்ட் சிலாங்கூர் செயல்பாட்டு மைய விளக்க அமர்வில் 19 சர்வதேச பங்கேற்பாளர்கள்

ஷா ஆலம், ஜூலை 30 - தேசிய பொது நிர்வாக நிறுவனம் (இந்தான்) ஏற்பாடு செய்த 'மலேசிய தொழில்நுட்ப ஒத்துழைப்பு திட்டம்' (MTCP) என்ற பட்டறையின் பங்கேற்பாளர்களிடமிருந்து மரியாதை நிமித்த வருகையை சிலாங்கூர் மாநில செயலகம் (SUK) பெற்றது.

இந்தான் செயலகத்தின் 6 பிரதிநிதிகளுடன் மொத்தம் 19 சர்வதேச பங்கேற்பாளர்கள் (பாலஸ்தீனம், சிரியா, மாலத்தீவு, பிலிப்பைன்ஸ், கிர்கிஸ் குடியரசு, தஜிகிஸ்தான், செயிண்ட் கிட்ஸ், நெவிஸ்), சிலாங்கூர் SUK அலுவலகம் மற்றும் ஷா ஆலம் ஸ்மார்ட் சிலாங்கூர் செயல்பாட்டு மையம் (SSOC) ஆகியவை இடம்பெற்ற ஒரு சுருக்கமான விளக்க அமர்விலும் தொழில்முறை வருகையிலும் கலந்து கொண்டனர்.

இதில் சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் மாநில நிர்வாகம், பேரிடர் மேலாண்மை மற்றும் டிஜிட்டல் முயற்சிகளில் சிறந்த நடைமுறைகளை பற்றி பங்கேற்பாளர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

அதுமட்டுமில்லாம்ல், 'ஸ்மார்ட் அரசு, ஸ்மார்ட் சமூகம், ஸ்மார்ட் டிஜிட்டல் உள்கட்டமைப்பு, ஸ்மார்ட் பொருளாதாரம் உள்ளிட்ட ஸ்மார்ட் சிலாங்கூர் முன்முயற்சிகளையும் SSDU விளக்கியது.

மேலும், ஸ்மார்ட் சிலாங்கூர் செயல்பாட்டு மையத்தின் (SSOC) கட்டுமானம், உள்கட்டமைப்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப வசதிகள் மற்றும் 2021 வெள்ளப் பேரழிவின் போது பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகள் எவ்வாறு கையாளப்பட்டன என்பது குறித்தும் விளக்கப்பட்டது.

இந்த அமர்வு மூலோபாய உரையாடல், அறிவுப் பகிர்வு மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு உறவுகளுக்கான வாய்ப்பையும் திறந்தது குறிப்பிடத்தக்கது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.