கோலாலம்பூர், ஜூலை 30 - நாடு முழுவதும் ஏற்படும் விபத்து விகிதத்தைக் குறைக்கும் முயற்சியாக, தொடர்ச்சியாக சாலை விபத்துகள் நிகழும் இடங்களில் குறிப்பாக ஆபத்தான பகுதிகளில் பொதுப்பணி அமைச்சு கவனம் செலுத்தும்.
100 மீட்டர் பரப்பளவில் அல்லது 50 மீட்டர் சுற்றளவில் மூன்று ஆண்டுகளுக்குள் ஒரே வகையான குறைந்தது மூன்று விபத்துகள் அல்லது வெவ்வேறு வகையான ஐந்து விபத்துகள் நிகழும்போது குறிப்பிட்ட பகுதி 'ஆபத்தான' பகுதியாக வகைப்படுத்தப்படுவதாக அதன் துணை அமைச்சர் டத்தோ ஸ்ரீ அஹ்மட் மஸ்லான் தெரிவித்துள்ளார்.
சேதமடைந்த சாலைகளால் ஏற்படும் தொடர் விபத்துகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து மக்களவையில் பதிலளித்தபோது அஹ்மட் மஸ்லான் இவ்வாறு கூறினார்.
சாலை விபத்துகளில் 80 விழுக்காட்டு விபத்துகள் பயனீட்டாளர்களின் மெத்தனப்போக்கினால் ஏற்படுவதாக அடையாளம் காணப்பட்டாலும், சாலை நிலைமைகளால் நிகழும் 13 விழுக்காட்டு விபத்துகளுக்கு அமைச்சு பொறுப்பாகும் என்று அவர் குறிப்பிட்டார்.
பெர்னாமா


