சீனா, ஜூலை 30 - பெய்ஜிங்கில் ஒரு சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் 30 பேர் உயிரிழந்தனர்.
கடந்த வாரம் புதன்கிழமை தொடங்கிய கனமழை, திங்கட்கிழமை பெய்ஜிங் மற்றும் அதை சுற்றியுள்ள மாகாணங்களில் தீவிரமடைந்தது.
மேலும், தலைநகரின் வட மாவட்டங்களில் 543.4 மில்லிமீட்டர் வரை மழை பெய்ததாக அதிகாரப்பூர்வ சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கனமழையைத் தொடர்ந்து, பெய்ஜிங்கில் 80,000-க்கும் மேற்பட்ட மக்களை, அதிகாரிகள் வேறு இடத்திற்கு மாற்றியுள்ளதாகவும் அந்நிறுவனம் செய்தி வெளியிட்டிருந்தது.
இதனிடையே, பெய்ஜிங்கில் வெள்ள எச்சரிக்கை வெளியிடப்பட்டதோடு, குடியிருப்பாளர்களும் தங்கள் இல்லங்களை விட்டு வெளியேற வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
-- பெர்னாமா