NATIONAL

கேக் வியாபாரத்தில் பீடுநடை போடும் திருமதி காயத்ரி

29 ஜூலை 2025, 8:58 AM
கேக் வியாபாரத்தில் பீடுநடை போடும் திருமதி காயத்ரி
கேக் வியாபாரத்தில் பீடுநடை போடும் திருமதி காயத்ரி
கேக் வியாபாரத்தில் பீடுநடை போடும் திருமதி காயத்ரி

ஷா ஆலம், ஜூலை 29 - தற்போது நம் நாட்டில் வியாபாரத்தில் ஈடுபட்டு வருவோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது.

குறிப்பாக இந்திய பெண்களின் பங்களிப்பும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

பூச்சோங் வட்டாரத்தில் கேக் தயாரித்து விற்பனை செய்யும் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள திருமதி காயத்ரி அவர்களை மீடியா சிலாங்கூர் கடந்த வாரம் பேட்டி கண்டது. அந்த நேர்காணலில் சுமார் 10 வருடங்களாக இந்த வியாபாரத்தை செய்து வரும் அவர் தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

இந்த வியாபாரத்தில் ஈடுபடுவதற்கு முன் தான் ஒரு வங்கியில் பணிபுரிந்து வந்ததாக அவர் தெரிவித்தார். பிறகு, கேக் செய்வதில் ஆர்வம் ஏற்பட்டு அதில் படிபடியாக ஈடுபட தொடங்கியுள்ளார் இவர்.

காயத்ரி செய்யும் கேக்குகளுக்கு குடும்பத்தார், உறவினர்கள், நண்பர்கள், அண்டை அயலார் ஆகியோரிடமிருந்து நல்ல வரவேற்பும் பாராட்டும் கிடைத்துள்ளது. இவையாவும் அவர் இந்த விபாயாரத்தை தொடங்க பிள்ளையார் சுழியாக அமைந்துள்ளது.

அதன்பின், தன் கணவர் மற்றும் குடும்பத்தாரின் ஆதரவோடு முழு நேரமாக கேக் செய்யும் தொழிலை தன் கையில் எடுத்துள்ளார். சுமார் 8 வருடங்களாக இந்த தொழிலை தான் வீட்டிலிருந்தே செய்ததாக அவர் பகிர்ந்து கொண்டார்.

சுமார் ஒன்றரை ஆண்டுக்கு முன்னர் தன் ஒரு கேக் ஸ்டியோவை வாடகைக்கு எடுத்துள்ளதாகவும் சொன்னார்.

இந்த கேக் செய்யும் வியாபாரத்தில் ஈடுபட்ட ஆரம்பக் காலத்தில் தான் பல சவால்களை சந்தித்ததாக அவர் பகிந்து கொண்டார். முதலில் தன்னுடைய வியாபாரத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே பெரிய சவாலாக இருந்ததாக அவர் கூறினார். இதற்கு காரணம் அவர் வியாபாரம் தொடங்கியக் காலக்கட்டத்தில் சமூக ஊடகங்கள் மக்கள் மத்தில் பெரிய அளவில் பிரபலம் அடைவில்லை என்றார். அதனால்தான் தான் சுற்றியுள்ளவர்களின் ஆதரவை அதிக எதிர்பாக்க வேண்டிய சூழ்நிலை இருந்தது மற்றும் புதிய வாடிக்கையாளர்களில் எண்ணிக்கை குறைவாக இருந்ததாகக் கூறினார்.

அதனை தொடர்ந்து, கோவிட் காலக்கட்டத்திலும் தனது வியாபாரம் பெரும் அளவில் பாதிக்கப்பட்டதாகக் கூறினார். அச்சமயம் அனைவரும் வீட்டில் இருக்க வேண்டிய சூழ்நிலை இருந்ததால் கேக் வாங்குபவர்களின் எண்ணிக்கை குறைய தொடங்கியதாகக் குறிப்பிட்டார். ஆனால், அதிலும் தான் மீண்டெழுந்து வந்து இந்த வியாபாரத்தை சிறப்பாக நடத்துவதாகக் கூறினார்.

மேலும், தான் கேக் செய்யும் வகுப்புகளை நடத்தி வருவதாக சொன்னார். தன்னிடம் பல மாணவர்கள் கேக் செய்வதை கற்று கொண்டு தற்போது அத்துறையில் சிறப்பாக செயல்பட்ட வருவது தனக்கு மிகவும் மகிழ்ச்சியளிப்பதாகக் கூறீனார்.

இந்த வியாபாரத் துறையில் தான் வெற்றியடைய தன்னுடைய குடும்பம் பக்கபலமாக இருந்ததாக காயத்ரி விவரித்தார். அதிலும் தன்னுடைய கணவர் மிகவும் உறுதுணையாக இருந்ததாகக் குறிப்பிட்டார்.

இன்று வரை தான் இந்த துறையில் பீடுநடை போட பத்து வருடக் காலங்கள் கற்று கொண்ட அனுபவங்களும் தன்னுடைய குடும்பத்தின் ஊக்கமும் தான் காரணம் என அவர் பெருமையாக மீடியா சிலாங்கூரிடம் பகிர்ந்து கொண்டார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.