பைபெராச், ஜூலை 29 - ஞாயிற்றுகிழமை மாலை தெற்கு ஜெர்மனியில் ரயில் விபத்து ஒன்று ஏற்பட்டது. அதில் மூவர் உயிரிழந்ததோடு 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
காவல்துறையினர் வழங்கிய தகவல்களில் அடிப்படையில், பேடன்-வுர்ட்டம்பேர்க் மாநிலத்தில் உள்ள ரீட்லிங்கன் நகருக்கு அருகில் மாலை 6.10 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
ரயில் தடம் புரண்ட தகவல் கிடைத்ததும் சுமார் 120 மீட்புப் பணியாளர்கள் முதலில் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
இவ்விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
Riedlingen மற்றும் Munderkingen நகரங்களுக்கு இடையே, சம்பந்தப்பட்ட ரயில் தண்டவாளத்தில் இருந்து விலகியபோது சுமார் 100 பேர் அதில் பயணித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பெர்னாமா