மெர்சிங், ஜூலை 29 - இங்குள்ள கம்போங் வாக் சலாமில் உள்ள ஒரு வீட்டின் எதிரே நேற்று காலை யானை தாக்கியதில் முதியவருக்கு காதில் காயம் ஏற்பட்டது.
அறுபத்து நான்கு வயதான அந்த முதியவர் தொழுகைக்காக சூராவ் செல்லத் தயாரான போது வன விலங்கின் தாக்குதலுக்கு ஆளாகி கீழே விழுந்தது தகவலின் அடிப்படையில் தெரியவந்தது என்று மெர்சிங் மாவட்ட காவல்துறைத் தலைவர் அப்துல் ரசாக் அப்துல்லா சானி கூறினார்.
பாதிக்கப்பட்ட நபர் காதில் ஏற்பட்ட காயத்திற்காக தற்போது ஜோகூர் பாரு, சுல்தான் இஸ்மாயில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு பெரிய அளவில் காயங்கள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படவில்லை என்று அவர் பெர்னாமா தொடர்பு கொண்டபோது தெரிவித்தார்.
இருப்பினும், இந்த சம்பவம் குறித்து எந்த காவல்துறைக்கு புகாரும் கிடைக்கவில்லை என்று அப்துல் ரசாக் கூறினார்.


