சமீபத்தில், ஊதா நிற திரவ பெட்ரோலிய எரிவாயு (LPG) சிலிண்டர்கள் குறித்து சமூக ஊடகங்களில் ஒரு வதந்தி வைரலானது இது சிறு வணிகர்களிடம் பீதியை ஏற்படுத்தியது. இருப்பினும், அந்தத் தகவல் தவறானது மற்றும் மே 1 முதல் ஊதா நிற பூப்பாய்களின் பயன்பாடுகளில் உள்ள உண்மை பின்னணி தெரியாமல் நிலைமையை குழப்பும் செயல்.
ஊதா நிற சிலிண்டர்கள் ஏன் திடீரென தோன்றின? மானிய கசிவைத் தடுக்க மானிய விலையில் கிடைக்கும் (பச்சை, சிவப்பு மற்றும் சாம்பல்) எரிவாயு சிலிண்டர்களை, மானியம் உதவி பெறாத (ஊதா) சிலிண்டர்களில் இருந்து வேறுபடுத்துவதே இதன் நோக்கமாகும்.
எனவே, அனைத்து வர்த்தகர்களும் ஊதா நிற பூப்பாய்களைப் பயன்படுத்த வேண்டியதில்லை. இது பெரிய அளவிலான தொழில்துறை மற்றும் வணிக பயனர்களுக்கு மட்டுமே கட்டாயமாகும். இந்த எரிவாயு சிலிண்டர்கள் பதிவு பெற்ற சிறு வணிக நிறுவனங்களுக்கு உதவும், அரசாங்க முயற்சியின் ஒரு பகுதியாகும்.
இது ஊதா நிற எரிவாயு சிலிண்டரின் உள்ளடக்கத்தையோ அல்லது அதன் பாதுகாப்பு அளவையோ பாதிக்காது. உண்மையில், அதிகாரிகளால் நிர்ணயிக்கப்பட்ட பாதுகாப்பு தர நிலைகளுக்கு இணங்கவே சந்தையில் விற்கப்படும் அனைத்து எரிவாயு சிலிண்டர்களும் இருக்க வேண்டும்.
எழுப்பப்பட்ட பிரச்சனை
- உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சகம் (KPDN) ஏப்ரல் 18 முதல் சமையல் எரிவாயு கட்டுப்பாடு செயல் திட்ட (Ops Gasak) அமலாக்கத்தை அறிவித்தது
- 2025 ஆம் ஆண்டு மே 1 முதல் அக்டோபர் 31, வரை மானிய விலை LPG எரிவாயு மோசடி மற்றும் விரயத்தை தடுக்கும் நடவடிக்கை செயல்படும்.
- வணிகத் தொழில்கள் மற்றும் பெரிய அளவிலான வணிகங்களில் தகுதியற்ற துறைகளால் LPG தவறாக பயன்படுத்தப்படுகிறது
- எரிவாயு மானிய கசிவு அரசாங்கத்திற்கு அதிக நிதி விரயத்தை ஏற்படுத்துகிறது. இது ஆண்டுக்கு RM3 பில்லியனை எட்டும்LPG மானியம்
- மக்கள் பயன்படுத்தும் LPG செலவில் ஒரு பகுதியை ஈடு கட்டுவது அரசாங்கத்தின் நோக்கம்.
- அரசாங்கம் 2018இல் RM2.39 பில்லியன் செலவில் LPG மானியத்தை ஈடுகட்டியது. அதைத் தொடர்ந்து RM2.54 பில்லியன் (2021), RM4 பில்லியன் (2022), RM3.01 பில்லியன் (2023) மற்றும் RM3.4 பில்லியன் (2024) செலவிட்டது.
- குறிப்பாக குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு மலிவு விலையில் சமையல் எரிவாயுவை வழங்குவதை உறுதி செய்ய இந்த நடவடிக்கை எடுக்கப் படுகிறது.
- வீட்டு உபயோகத்திற்கான LPG 10, 12 மற்றும் 14 கிலோகிராம் பீப்பாய்களுக்கு மட்டுமே மானிய உதவி அனுமதிக்கப் படுகிறது-விலை கட்டுப்பாடு மற்றும் கொள்ளை இலாப எதிர்ப்பு சட்டம் 2011 ஆல் ஒழுங்குபடுத்தப்பட்டு. அக்டோபர் 15, 2021 முதல் அமலுக்கு வருகிறது
ஊதா நிற எரிவாயு சிலிண்டர்கள் அறிமுகப்படுத்தப்பட்டன
- மே 1 முதல் செயல்படுத்தப்படும், மானிய உதவி விலை மற்றும் மானியம் உதவி இல்லாத எரிவாயு சிலிண்டர்களை வேறுபடுத்தும் நோக்கில் ஊதா வர்ணம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
- 42 கிலோ கிராமுக்கு மேல் (மூன்று 14 கிலோகிராம் சிலிண்டர்களுக்கு மேல்) எல்பிஜி பயன்படுத்தினால் சிறப்பு அனுமதி தேவை. வணிக எல்பிஜியைப் பயன்படுத்த வேண்டும்
- பயன்படுத்த வேண்டிய துறைகள் உற்பத்தித் தொழில்கள், பெரிய அளவிலான உணவகங்கள், சலவை சேவைகள், கால்நடை வளர்ப்பு மற்றும் அதிக அளவில் எல்பிஜியைப் பயன்படுத்தும் வணிகங்கள்
LPG மானியம் தொடரும் என்று அரசாங்கம் உத்தரவாதம் அளிக்கிறது
- அரசாங்கம் LPG மானியத்தை ஒருபோதும் திரும்பப் பெறவில்லை. அதற்கு பதிலாக தகுதியற்ற தொழில்கள் மற்றும் வாணிகங்கள் மானிய உதவி விலையில் பெற்ற எரிவாயுவை தவறாக பயன்படுத்துவதைத் தடுக்க Ops Gasak 2025 செயல்படுத்தப்படுகிறது என உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சர் டத்தோ அர்மிசான் முகமது அலி தெரிவித்தார்.
- சிறு வணிகர்கள் இன்னும் மானிய விலையில் பச்சை LPG சிலிண்டர்கள் பயன்படுத்தலாம் என உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு துணை அமைச்சர் டாக்டர் புசியா சாலே தெரிவித்தார்.
LPG புகார்கள்
- உள்நாட்டு வர்த்தக அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தை www.kpdn.gov.my/ms/நாடவும்
- 019-641 6768 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் செய்யவும்


