புத்ராஜெயா, ஜூலை 28 - தற்போது தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையிலான எல்லைப் பகுதியில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் தாய்லாந்தில் உள்ள மலேசியர்கள் கம்போடியாவின் எல்லைப் பகுதிக்கு அருகில் இருக்கும் இடங்களுக்கு பயணம் செய்ய வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தாய்லாந்தின் வடக்கு மற்றும் வடகிழக்குப் பகுதியில் உள்ள ஏழு சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டுள்ளப்பட்டுள்ள வேளையில் தாய்லாந்தில் உள்ள மலேசியத் தூதரகம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
மேலும், ஆபத்தான பகுதிகளில் ஏற்கனவே உள்ள மலேசியர்கள், தடைசெய்யப்பட்ட அல்லது முறையீடு செய்யப்பட்ட பகுதிகளைத் தவிர்க்கும் வகையில் தங்கள் பயணத் திட்டங்களைக் கவனமாகத் திட்டமிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தாய்லாந்தில் உள்ள மலேசியர்கள், உள்ளூர் ஊடகங்கள் மற்றும் மலேசியத் தூதரகத்தின் அதிகாப்ரபூர்வ தகவல்கள் மூலம் நெருக்கடி நிலைக் குறித்த தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம்.
-- பெர்னாமா


