ad
MEDIA STATEMENT

கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் மேம்பாலத்திலிருந்து விழுந்தது-  இளைஞர் பலி

27 ஜூலை 2025, 4:22 AM
கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் மேம்பாலத்திலிருந்து விழுந்தது-  இளைஞர் பலி

ஷா ஆலம், ஜூலை 27-  டாமன்சாரா-ஷா ஆலம் நெடுஞ்சாலையில் (டேஷ்) சுமார் 21 மீட்டர் உயரமுள்ள மேம்பாலத்திலிருந்து  விழுந்த  மோட்டார் சைக்கிளோட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

நேற்று மாலை 4.45 மணியளவில் யமஹா YZF-R15  ரக மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற அந்த ஆடவர்  பெர்சியாரான் மொக்தார் டஹாரி தடத்தில் உள்ள வளைவில் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாக நம்பப்படுகிறது என்று ஷா ஆலம் மாவட்ட  காவல்துறைத் தலைவர் ஏசிபி முகமது  இக்பால் இப்ராஹிம் கூறினார்.

 

இந்த விபத்தின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவருக்கு தலை மற்றும் காலில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது என்று அவர் நேற்று இரவு ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த அந்த  23 வயது இளைஞர் சம்பவம் நடந்தபோது கம்போங் மெலாயு சுபாங்கில் உள்ள தனது வீட்டிலிருந்து கோலாலம்பூரில் உள்ள ஒரு மோட்டார் சைக்கிள் பழுதுபார்க்கும் கடைக்குச் சென்று கொண்டிருந்ததாக அவர் கூறினார்.

இந்த வழக்கு 1987 ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின்  41(1) வது பிரிவின் கீழ் விசாரிக்கப்படுகிறது.

இவ்விபத்து  தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் விசாரணைக்கு உதவ ஷா ஆலம் மாவட்ட காவல் தலைமையகத்தின் புலனாய்வு மற்றும் போக்குவரத்து அமலாக்கப் பிரிவின் விசாரணை  அதிகாரி இன்ஸ்பெக்டர் நூர் இக்மல் மைசாரா அஸ்மானை 012-283 6851 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.