கோலாலம்பூர், ஜூலை 25 - 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மலேசிய குடிமக்களுக்கு சாரா திட்டத்தின் மூலம் 100 வெள்ளி வழங்கப்படும் என முன்னதாகப் பிரதமர் அறிவித்திருந்தார்.
அதன் தொடர்பாக 100 ரிங்கிட் உதவித்தொகை வழங்கப்படும் (BANTUAN SARA) என்று அண்மையில் சமூக ஊடகத்தில் பரவி வரும் செய்தி போலியானது என்று நிதி அமைச்சு அறிவித்துள்ளது.
முகநூலில் வெளியிடப்பட்ட பதிவின் அடிப்படையில் ``BANTUAN SARA`` திட்டத்திற்கு எந்த முன் விண்ணப்பமும் தேவையில்லை என்று நிதி அமைச்சு விளக்கமளித்துள்ளது.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்த 100 ரிங்கிட் உதவித்தொகை 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மலேசிய குடிமக்களின் அடையாள அட்டையின் (MyKad) அடிப்படையில் தானாகவே அவர்களுக்கு அனுப்பப்படும்.
மேலும், சமூக ஊடகங்களில் வெளிவரும் போலி செய்திகளால் பொதுமக்கள் எளிதில் ஏமாற கூடாது. மோசடிக்கு ஆளாகாமல் தங்களைத் தற்காத்து கொள்ள வேண்டும் என நிதி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்த கூடுதல் தகவலுக்கு பொதுமக்கள் நிதி அமைச்சின் அதிகாரப்பூர்வ தளங்களை நாடலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

