கோலாலம்பூர், ஜூலை 25 - தெங்கு அம்புவான் பகாங் துங்கு அசிசா அமினா மைமுனா இஸ்கண்டாரியா என்ற பெயரில் பரவும் போலி டிக்டாக் கணக்கின் மூலம் ஏமாற வேண்டாம் என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகின்றது.
தன்னை போல ஆள்மாறாட்டம் செய்து, துங்கு அசிசா தொடர்பான பல பதிவுகள் 'தெங்கு அம்புவான் பகாங்' என்ற போலி டிக்டாக் கணக்கில் வெளியிடப்படுவதை பகாங் அரண்மனை கண்டறிந்துள்ளது.
எந்தவொரு நேரடி செயல்பாடுகளும், பகாங் சுல்தானின் சமூக ஊடக தளத்திலும், தமது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்திலும் மட்டுமே வெளியிடப்படும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
சுமார் 728,000 பேர் அந்த சமூக ஊடக பக்கத்தைப் பின் தொடர்வதாக தெரிவிக்கப்பட்டது.
பெர்னாமா


