(ஆர்.ராஜா)
ஷா ஆலம், ஜூலை 24- கோத்தா கெமுனிங் சட்டமன்றத் தொகுதி இலிட் ப்ரோ பயிற்சி மற்றும் ஆலோசக சேவை மையத்துடன் இணைந்து 2025 எஸ்.பி.எம். தேர்வை எழுதும் மாணவர்களுக்காக சிறப்பு வழிகாட்டி கருத்தரங்கை நடத்தவுள்ளது.
இந்த கருத்தரங்கு வரும் ஆகஸ்டு 17ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை ஷா ஆலம், மேலாண்மை மற்றும் அறிவியல் பல்கலைக்கழகத்தில் (எம்.எஸ்.யு.) கலைப்படைப்பு மற்றும் பாட அரங்கில் நடைபெறும்.
கல்வித் துறையில் அனுபவம் வாய்ந்த பயிற்றுநர்களைக் கொண்டு நடத்தப்படும் இந்த கருத்தரங்கில் கேள்விகளுக்கு விடை அளிக்கும் நுட்பங்கள், தன்முனைப்பு மற்றும் கற்றல் தொடர்பான நுணுக்கங்கள் கற்றுத் தரப்படும்.
கோத்தா கேமுனிங் தொகுதியைச் சேர்ந்த மாணவர்களுக்காக இலவசமாக நடத்தப்படும் இந்த பிரத்தியேகக் கருத்தரங்கில் பங்கு கொள்வதற்கு குறைவான எஞ்சியுள்ளதால் https://forms.gle/hWXjva13gGUmjJUb7 என்ற இணைப்பின் வாயிலாக விரைந்து பதிவு செய்து கொள்ளும்படி மாணவர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.


