கோலாலம்பூர், ஜூலை 23 - இம்மாதம் அமலுக்கு வரவிருக்கும் மின்சார கட்டண மறுசீரமைப்பைத் தொடர்ந்து தீபகற்ப மலேசியாவில் உள்ள பெரும்பாலான குடியிருப்பாளர்களுக்கு மின்சாரக் கட்டணத்தில் எந்த அதிகரிப்பும் இருக்காது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.
இவ்வாண்டின் முதல் ஆறு மாதங்களுடன் ஒப்பிடுகையில் 85 சதவீத வீட்டு பயனீட்டாளர்கள் 2025 ஆம் ஆண்டு ஜூலை மாத மின்சாரக் கட்டணத்தில் 14 விழுக்காடு வரை குறைப்பை அனுபவிப்பர் என்று அவர் கூறினார்.
14 விழுக்காடு வரை கட்டணக் குறைவு ஏற்பட்டுள்ளது என்பது இதன் பொருளாகும்.
இது வெளியில் அவதூறு பரப்பப்படுவது போல் இல்லை.
உதாரணமாக, இதை விலை உயர்வு என்று கருத வேண்டாம். எந்த அதிகரிப்பும் இல்லை. எண்ணெய் விலை (மின்சார உற்பத்தி) இப்போது குறைந்துள்ளதால் 2025 ஜூலையில் புதிய மின்சார கட்டணம் தொடங்கினாலும் மக்களின் மின்சாரக் கட்டணப் பில் அதிகரிக்காது என்று பிரதமர் தெளிவுபடுத்தினார்.
இன்று அனைத்து முக்கிய தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடக தளங்களிலும் நேரடியாக ஒளிபரப்பப்பட்ட மலேசியர்களுக்கான நன்றி தெரிவிக்கும் அறிவிப்பின் போது அவர் இவ்வாறு கூறினார்.


