கோலாலம்பூர், ஜூலை 23 – இந்த ஆண்டு இறுதி வரை டாருல் ஏஹ்சான் இலவச குடிநீர் திட்டத்திற்கான விண்ணப்பம் திறந்திருக்கும். அத்திட்டத்தின் வழி பயன்பெற விரைந்து பதிவு செய்யுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இத்திட்டத்தில் பதிவு செய்வதில் பிரச்சனைகள் எதிர்நோக்குவோர் தங்களைத் தொடர்பு கொள்ளலாம் என்று பெங்குருசான் ஆயர் சிலாங்கூர் சென் பெர்ஹாட் நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி ஆடாம் சுஃபியான் கஸாலி கூறினார்.
இந்த திட்டத்தில் பங்கேற்க விரும்புவோர் ஆயர் சிலாங்கூர் (அலுவலகம்) அல்லது காட்சிக்கூடத்திற்கு வரலாம். அல்லது 15300 என்ற எண்களில் அழைக்கலாம் என அவர் சொன்னார்.
கடந்த 2024 டிசம்பர் வரை இந்த திட்டத்தில் 324,000 கணக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த ஆண்டு 500,000 பயனீட்டாளர்களைப் பதிவு செய்யும் இலக்கை அடைவோம் என்று நம்புகிறோம் என்று அவர் தெரிவித்தார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த இலவச குடிநீர்த் திட்டத்தின் வழி இலக்கிடப்பட்டத் தரப்பினருக்கு 20 கன மீட்டர் நீர் இலவசமாக வழங்கப்படுகிறது.
இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க https://www.airselangor.com/services/sade?lang=ms என்ற இணையத்தளத்தை நாடவும்.


