ஷா ஆலம், ஜூலை 23 - இவ்வாண்டு செம்படம்பர் 16ஆம் தேதி மலேசிய
தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில் செப்டம்பர் 15ஆம் தேதி
திங்கள்கிழமை கூடுதலாக ஒரு தினம் பொது விடுமுறை
வழங்கப்படவுள்ளது.
மலேசியர்களின் ஒற்றுமை உணர்வுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த
கூடுதல் விடுமுறை வழங்கப்படுவதாகப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார்
இப்ராஹிம் கூறினார்.


