ஷா ஆலம், ஜூலை 23 - நாட்டில் டோல் கட்டண உயர்வை ஒத்தி வைக்க
அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது. மக்கள் தற்போதைய கட்டண
விகிதத்தை மக்கள் தொடர்ந்து அனுபவிப்பதற்கு ஏதுவாக இந்த
சலுகை வழங்கப்படுகிறது. இதற்கு உண்டாகும் 50 கோடி வெள்ளி
நிதிச்சுமையை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளும்.
செனாய்-டேசாரு நெடுஞ்சாலை, கிழக்குக் கரை நெடுஞ்சாலை 2, தென்
கிள்ளான் பள்ளத்தாக்கு விரைவுச்சாலை, பட்டர்வெர்த் புறவட்டச் சாலை
மற்றும் கோலாலம்பூர்-புத்ரா ஜெயா நெடுஞ்சாலை ஆகியவற்றை இந்த
கட்டண உயர்வு ஒத்தி வைப்பு உட்படுத்தியிருக்கும் என பிரதமர்
டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.


