ஷா ஆலம், ஜூலை 23 - பதினெட்டு வயதுக்கும் மேற்பட்ட அனைத்து
மலேசியர்களுக்கும் உதவித் தொகையாக 100 வெள்ளி வழங்கப்படும். ஒரு
முறை மட்டுமே வழங்கப்படும் இந்த உதவித் தொகை சாரா எனப்படும்
ரஹ்மா அடிப்படை உதவித் திட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்டவர்களின்
மைகார்டில் சேர்க்கப்படும்.
இந்த தொகையை எதிர்வரும் ஆகஸ்டு 31ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 31ஆம்
தேதி வரை செலவிடலாம் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்
கூறினார்.
நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பிரதான
பேரங்காடிகள் உள்பட 4,100 கடைகளில் அத்தியாவசியப் பொருள்களை
வாங்குவதற்கு இந்த தொகையைப் பயன்படுத்தலாம் என்று அவர்
சொன்னார்.


