கோலாலம்பூர், ஜூலை 23 - பூச்சோங், ஜாலான் பூச்சோங் பெர்மாயில்
நேற்று மாலை நிகழ்ந்த கைகலப்பின் போது ஆடவர் ஒருவரைக் கடத்திச்
சென்ற மூன்று சந்தேக நபர்களை போலீசார் வலைவீசி தேடி
வருகின்றனர்.
அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் ஆடவர் ஒருவரை லோரியில்
வலுக்கட்டாயமாக ஏற்றிச் செல்லும் சம்பவம் தொடர்பில் பொது
மக்களிடமிருந்து தங்களுக்கு நேற்று மாலை 6.38 மணியளவில் தகவல்
கிடைத்ததாக சுபாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி வான்
அஸ்லான் வான் மாமாட் கூறினார்.
இந்த சம்பவம் தொடர்பில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரும்
வேளையில் பாதிக்கப்பட்ட நபரையும் மூன்று சந்தேகப் பேர்வழிகளையும்
கண்டு பிடிக்கும் முயற்சியும் முடுக்கி விடப்பட்டுள்ளது என்று அவர்
நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டார்.
இந்த சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்தவர்கள் போலீசாரின்
விசாரணைக்கு உதவ 011-33094457 என்ற எண்களில் விசாரணை அதிகாரி
இன்ஸ்பெக்டர் ஜி.டினேஷ் அல்லது சுபாங் ஜெயா மாவட்ட போலீஸ்
நிலையத்தை தொடர்பு கொள்ளும்படி அவர் கேட்டுக் கொண்டார்.
இந்த கடத்தல் சம்பவத்தைச் சித்தரிக்கும் 15 வினாடி காணொளி சமூக
ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டது.


