ஷா ஆலம், ஜூலை 23 - இவ்வாண்டு உலு லங்காட் மாவட்டத்தில் 226.9 கிலோமீட்டர் தொலைவுக்கு சாலைகளில் ஏற்பட்ட சேதங்களை சரிசெய்ய மொத்தம் 71 லட்சம் வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளதாக உள்கட்டமைப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ஹிஷாம் ஹஷிம் தெரிவித்தார்.
அம்பாங், பாங்கி, பெரானாங், உலு லங்காட் மற்றும் காஜாங் ஆகிய ஐந்து பகுதிகளில் மேற்கொள்ளப்படும் இந்த சாலை பராமரிப்பு பணிக்கு மலேசிய சாலை பதிவு தகவல் அமைப்பின் (மாரிஸ்) கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
மொத்தம் 10 லட்சம் வெள்ளியை உட்படுத்திய 26 பராமரிப்பு பணிகளுக்கான ஒப்பந்தங்கள் இன்று வழங்கப்பட்டன. இது உலு லங்காட்டை அதிக விலைப் விலைப்புள்ளிகளை வழங்கும் மாவட்டமாகவும், சிலாங்கூரில் உள்ள மற்ற ஒன்பது மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையிலான பணிகளைப் பெறும் மாவட்டமாகவும் ஆக்கியுள்ளது.
தேர்வு செய்யப்பட்ட 26 குத்தகையாளர்களுக்கும் வாழ்த்துகள். அவர்கள் முழுப் பொறுப்புடனும் கட்டொழுங்குடனும் பணியைச் செய்து குறிப்பிட்ட காலத்திற்குள் பூர்த்தி செய்ய முடியும் என்று நம்புகிறோம் என்று அவர் முகநூல் பதிவில் தெரிவித்தார்.
முன்னதாக, அவர் உலு லங்காட் பொதுப்பணித் துறையின் 2025 பணிகளுக்கான குலுக்கல் திட்டத்தை அதிகாரப்பூர்வமாகப் பார்வையிட்டார். இதில் 239 ஜி1 பிரிவு குத்தகையாளர்கள் கலந்து கொண்டனர்.


