NATIONAL

குறைக்கப்படும் முட்டை மானியத்தின் மூலம் நாடு ஒரு மாதத்திற்கு RM45 மில்லியனை சேமிக்க முடியும்

22 ஜூலை 2025, 9:38 AM
குறைக்கப்படும் முட்டை மானியத்தின் மூலம் நாடு ஒரு மாதத்திற்கு RM45 மில்லியனை சேமிக்க முடியும்

ஷா ஆலம், ஜூலை 22: ஜூலை 31 ஆம் தேதியுடன் குறைக்கப்படும் முட்டை மானியத்தின் மூலம் நாடு ஒரு மாதத்திற்கு RM45 மில்லியனை சேமிக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ஆகஸ்ட் முதலாம் தேதி முதல், கோழி முட்டைகள் மீதான விலைக் கட்டுப்பாடு முற்றிலுமாக நீக்கப்படும்.

மே முதலாம் தேதி தொடங்கி கோழி முட்டைகளுக்கான உதவித்தொகை, ஒரு முட்டைக்கு 10 சென்னில் இருந்து ஐந்து சென்னாகக் குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பின்னர், மூன்று மாத காலத்திற்கு 13 லட்சத்து 50 ஆயிரம் ரிங்கிட்டை அரசாங்கம் சேமிக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கோழி முட்டைகளின் விநியோகம் தற்போது நிலையான மட்டத்தில் உள்ளது மற்றும் நியாயமான விலையில் விற்கப்படுகிறது என்று வேளாண்மை மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது சாபு கூறினார்.

“ஜூலை மாதத்தில், கோழி முட்டைகளின் உற்பத்தி மாதத்திற்கு 1.75 பில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் உள்நாட்டு நுகர்வுத் தேவைகள் 1.06 பில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.

“இது 0.69 பில்லியன் உற்பத்தி உபரி இருப்பதைக் காட்டுகிறது, அதில் ஒரு பகுதி ஏற்றுமதி சந்தைக்குப் பயன்படுத்தப்படும்,” என்று அவர் இன்று மக்களவையில் நடந்த வாய்மொழி கேள்வி பதில் அமர்வின் போது கூறினார்.

கோழி முட்டை உதவித்தொகை மறு இலக்கிடப்பட்டதன் மூலம் கிடைத்த சேமிப்பு மற்றும் சந்தையிலும் மக்களின் ஒட்டுமொத்த வாழ்க்கைச் செலவினத்திலும் அதன் தாக்கம் குறித்து பெக்கான் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்ரீ முஹமட் ஃபுசி அலி எழுப்பியக் கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.

பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.