கோலாலம்பூர், ஜூலை 22 - இவ்வாண்டு ஜூன் மாதம் மலேசியா 134.5 குறியீட்டுப் புள்ளியுடன் 1.1 விழுக்காடு பணவீக்கத்தை பதிவு செய்துள்ளது.
கடந்தாண்டு இதே மாதத்தில் பதிவு செய்யப்பட்ட 2.0 விழுக்காட்டைக் காட்டிலும் இது குறைவு என்று மலேசிய புள்ளிவிவரத் துறை, டி.ஓ.எஸ்.எம் தெரிவித்துள்ளது.
இது மே மாதம், 3.6 ஆக பதிவாகி இருக்கும் உள்நாட்டு உற்பத்தியின் உற்பத்தியாளர் விலைக் குறியீடு சரிவு கண்டிருப்பதையும் பிரதிபலிக்கிறது.
573 பொருட்களில் 339 விலை அதிகரிப்பைப் பதிவு செய்திருப்பதாக மலேசிய புள்ளிவிவரத் துறை தலைவர் டத்தோ ஸ்ரீ டாக்டர் முஹமட் உசிர் மஹிடின் தெரிவித்தார்.
எனினும், அந்த எண்ணிக்கையில், 329 அல்லது 97.1 விழுக்காட்டு பொருட்கள், 10 விழுக்காடு அல்லது அதற்கு குறைவான அதிகரிப்பை பதிவு செய்துள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், 10 பொருட்கள் மட்டுமே 10 விழுக்காட்டிற்கும் மேற்பட்ட வளர்ச்சியை பதிவு செய்துள்ளன.
2025-ஆம் ஆண்டு ஜூன் மாதம் மலேசியாவின் அடிப்படை பணவீக்கம் 1.8 விழுக்காட்டில் எந்தவொரு மாற்றமும் இன்றி உள்ளது.
பெர்னாமா


