ஷா ஆலம், ஜூலை 22 - மலேசியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நாளை காலை ஒரு அறிவிப்பை வெளியிடவுள்ளார்.
காலை 10.30 மணிக்கு இந்த அறிவிப்பு வெளியிடப்படும் என்று தகவல் தொடர்பு அமைச்சரும் அரசாங்க செய்தித் தொடர்பாளருமான டத்தோ பாஹ்மி ஃபாட்ஸில் தெரிவித்தார்.
"எதிர்பார்த்துக் காத்திருங்கள்" என்று அவர் இன்று தனது முகநூலில் வெளியிட்ட ஒரு பதிவில் கூறினார்.
மலேசிய மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஒரு விஷேச அறிவிப்பை வெளியிடப் போவதாக முன்னதாக அன்வார் தனது முகநூல் பக்கத்தில் பதிவில் தெரிவித்தார்.
இருப்பினும், நெகிரி செம்பிலான் மாநிலத்தின் போர்ட்டிக்சனில் நடைபெற்ற ஒற்றுமை அரசின சந்திப்பு நிகழ்வைத் தொடர்ந்து அந்த அறிவிப்பை மறுபரிசீலனை செய்ய தம்பூன் நாடாளுமன்ற உறுப்பினருமான அன்வாருக்கு சிறிது நேரம் தேவைப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதுவரை, அந்த அறிவிப்பு தொடர்பான எந்த விவரங்களும் வெளியிடப்படவில்லை.


