கோலாலம்பூர், ஜூலை 22 - இன்று காலை 10.00 மணி நிலவரப்படி நாட்டின் நான்கு பகுதிகளில் காற்று மாசுபாட்டு குறியீடு (ஏ.பி.ஐ.) ஆரோக்கியமற்ற அளவில பதிவாகியுள்ளது.
நெகிரி செம்பிலான் மாநிலத்தின் சிரம்பான் (155), நீலாய் (154), சிலாங்கூரில் உள்ள ஜோஹான் செத்தியா (151) மற்றும் பஹாங் மாநிலத்தின் பாலோக் பாரு குவாந்தான் (140) ஆகியவையே அந்த நான்கு இடங்களாகும் என சுற்றுச்சூழல் துறையின் மலேசிய காற்று மாசுக் குறியீடு மேலாண்மை அமைப்பு தனது அகப்பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.
101 முதல் 200 வரையிலான ஏ பி.ஐ. குறியீடு முதியவர்கள், சிறார்கள் மற்றும் சுவாச நோய்கள் உள்ளவர்கள் உள்ளிட்ட அதிக நோய்த் தாக்கம் கொண்டத் தரப்பினரை பெரிதும் பாதிக்கும் என சுற்றுச்சூழல் துறை கூறியது.
நாடு முழுவதும் உள்ள 68 காற்று தர கண்காணிப்பு நிலையங்களின் அடிப்படையில் ஒவ்வொரு மணி நேரமும் ஏ.பி.ஐ. தரவு வெளியிடப்படுகிறது. பொதுமக்கள் https://eqms.doe.gov.my/APIMS/
புகைமூட்டத்தின் போது கடைபிடிக்க வேண்டிய சுகாதார ஆலோசனைகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது, அதனை www.moh.gov.my என்ற இணையதளத்தில் காணலாம்.


