பெட்டாலிங் ஜெயா, ஜூலை 21 - ஈராண்டுகளுக்கு முன்பு ஆட்டிஸம் குறைபாடு உள்ள தனது ஆறு வயது மகனை புறக்கணித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டிலிருந்து ஜெய்ன் ரய்யான் அப்துல் மதீனின் தந்தை ஜெய்ம் இக்வான் ஜஹாரியை இன்று இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றம் விடுதலை செய்தது.
முப்பது வயதான அந்த ஆடவருக்கு எதிராக அடிப்படை முகாந்திரம் இருப்பதை வழக்கு விசாரணையின் முடிவில் அரசுத் தரப்பு நிரூபிக்கத் தவறிவிட்டதைக் கண்டறிந்த பின்னர் நீதிபதி ஷியாலிசா வார்னோ இந்த தீர்ப்பை வழங்கினார்.
இருப்பினும், அதே குற்றச்சாட்டில் ஜெய்ன் ரய்யானின் தாயார் இஸ்மானிரா அப்துல் மனாஃப் (வயது 30) தனது தற்காப்பு வாதத்தை முன்வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.


