கோலாலம்பூர், ஜூலை 21 - தரவு மைய கட்டுமானத் திட்டத்தில் ஊழல் செய்ததாக, சந்தேகத்தின் பேரில் கட்டுமான நிறுவனத்தின் திட்ட நிர்வாகி ஒருவர், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் எஸ்பிஆர்எம்-ஆல் கைது செய்யப்பட்டார்.
து. எஸ்பிஆர்எம் அதிகாரிகளின் வருகையை அறிந்த அந்த ஆடவர், ஆதாரங்களை அழிக்க சுமார் 10 லட்சம் ரிங்கிட் அடங்கிய மூட்டைகளை எரித்து அப்புறப்படுத்த முயன்றதாக நம்பப்படுகிறது.
கடந்த வியாழக்கிழமை, பெட்டாலிங் ஜெயாவில் உள்ள சந்தேக நபரின் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது சுமார் 10 லட்சம் மதிப்புள்ள 100 ரிங்கிட் நோட்டுகள் எரிந்த நிலையில் கண்டுடெடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
வீட்டில் மேற்கொள்ளப்பட்ட முழு சோதனைக்கு பிறகு, தலையணை வைக்கும் பல பெட்டிகளில் சேமித்து வைக்கப்பட்டிருந்த சுமார் 75 லட்சம் ரிங்கிட் ரொக்கப் பணத்தையும் எஸ்பிஆர்எம் கைப்பற்றியது.
இச்சோதனையில் Rolex, Omega மற்றும் Cartier ரகத்திலான கைகடிகாரங்கள், மோதிரம் மற்றும் தங்க காசுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
பெர்னாமா


