கோலாலம்பூர், ஜூலை 21 - இன்று காலை 9.17 நிலவரப்படி நாடு முழுவதும் மொத்தம் எட்டு இடங்களில் காற்று மாசுபாட்டு குறியீடு (ஏ.பி.ஐ.) ஆரோக்கியமற்ற அளவில் பதிவாகியுள்ளது. இதில் மலாக்கா மாநிலத்தின் அலோர் காஜாவில் காற்றின் தரக்குறியீடு அதிகபட்ச நிலையில் அதாவது 160ஆகப் பதிவாகியுள்ளது.
சுற்றுச்சூழல் துறையின் கீழுள்ள காற்று மாசுபாட்டு குறியீட்டு மேலாண்மை அமைப்பின் (ஏ.பி.எம்.எஸ்.) அண்மைய தரவுகளின்படி ஆரோக்கியமற்ற ஏ.பி.ஐ. குறியீட்டைப் பதிவு செய்த பகுதிகள் பின்வருமாறு-
தெமர்லோ, (பகாங்)- 156
பந்திங், (சிலாங்கூர்) - 155
நீலாய், (நெகிரி செம்பிலான்) - 155
கெமமான், (திரெங்கானு)- 153
ஜோஹான் செத்தியா, (சிலாங்கூர்) - 152
செராஸ், (கோலாலம்பூர்) - 151
புத்ராஜெயா - 124
101 முதல் 200 வரையிலான ஏ.பி.ஐ. குறியீடு ஆரோக்கியமற்றவை என வகைப்படுத்தப்பட்டுள்ள வேளையில் 51 முதல் 100 வரையிலான குறியீடு மிதமானதாகவும் 0 முதல் 50 வரையிலான குறியீடு சிறப்பானதாகவும் கருதப்படுகின்றன.
இன்று காலை நிலவரப்படி, மூன்று பகுதிகளில் காற்றின் தரம் நல்ல நிலையில் பதிவாகியுள்ளன. அதே நேரத்தில் 57 இடங்கள் மிதமான அளவில் இருந்தன.
பொதுமக்கள் அண்மைய ஏ.பி.ஐ. குறியீடுகளை https://apims.doe.gov.my என்ற அதிகாரப்பூர்வ ஏ பி.எம்.எஸ். வலைத்தளம் வழியாக நேரடியாகக் காணலாம்.
முன்னதாக, எல்லை தாண்டிய புகைமூட்டம் தற்போது தீபகற்ப மலேசியாவின் மேற்கு கடற்கரையில் உள்ள பல மாநிலங்களைப் பாதித்துஉளாளதாக மலேசிய வானிலை ஆய்வுத் துறையின் தலைமை இயக்குநர் டாக்டர் முகமட் ஹிஷாம் முகமட் அனிப்
முன்னதாக அறிவித்திருந்தார்.


