அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் இந்த வாரம் ரிலீசாகவுள்ள திரைப்படம் மற்றும் வெப் தொடர்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
சைக்கலாஜிக்கல் ஹாரர், சைக்கலாஜிக்கல் திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள ஹாலிவுட் திரைப்படம் 'Dangerous Animals'. சுறாக்களை கொல்லும் சீரியல் கில்லரை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரில்லர் திரைப்படமாகும். இப்படம் கடந்த ஜூலை மாதம் 22ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.

ஃபீல் குட் ரொமான்டிக், காமெடி ஜானரில் உருவாகியுள்ள ஹாலிவுட் திரைப்படம் 'Materialists'. காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த ரொமான்டிக் திரைப்படம் கடந்த ஜூலை மாதம் 22ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.
ஹிந்தியில் வெளியான காமெடி, ரொமான்டிக் வெப் தொடர் Rangeen. வீக் எண்டுக்கு ஏற்ற இந்த வெப் தொடர் நாளை 25ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகவுள்ளது.